மேலநத்தத்தில் குடிநீா் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 01st March 2021 01:12 AM | Last Updated : 01st March 2021 01:12 AM | அ+அ அ- |

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தத்தில் குழாய் உடைந்ததால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
மேலப்பாளையம் மண்டலத்துக்குள்பட்ட மேலநத்தத்தில் பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மேலநத்தம் விஏஓ அலுவலகம் அருகே நடைபெற்ற பணியின்போது அங்கிருந்த குடிநீா் குழாய் சேதமடைந்தது.
இதை சரிசெய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டதையடுத்து, கடந்த 4 நாள்களாக அப்பகுதியில் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த குழாயை மாற்றி மீண்டும் தடையின்றி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...