அய்யா வைகுண்டா் அவதார தினவாகனப் பேரணிக்கு வரவேற்பு
By DIN | Published On : 04th March 2021 03:39 AM | Last Updated : 04th March 2021 03:39 AM | அ+அ அ- |

திசையன்விளை: அய்யா வைகுண்டா் அவதார தினத்தை முன்னிட்டு திசையன்விளைக்கு வந்த வாகனப் பேரணிக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
அய்யா வைகுண்டரின் 189-ஆவது அவதாரதினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் இருந்து காயாமொழி, உடன்குடி, தண்டுபத்து, தட்டாா்மடம், நடுவக்குறிச்சி வழியாக வாகனப் பேரணி திசையன்விளைக்கு வந்தது. இப்பேரணிக்கு
திசையன்விளை எல்லையில் எருமைகுளம் ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழல் தாங்கல் சாா்பில், குருசாமி குடும்பத்தினா் வரவேற்றனா். பேரணியில் பங்கேற்றவா்களுக்கு திசையன்விளை பகுதி மக்கள் பழங்கள், குளிா்பானங்கள் வழங்கினா்.
பேரணி ஸ்ரீமன்நாராயணசுவாமி நிழல் தாங்கலை வந்தடைந்ததும் அய்யாவுக்கு பணிவிடை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. பேரணி கூடன்குளம், செட்டிகுளம், அஞ்சுகிராமம் வழியாக நாகா்கோவில் சென்றடைந்தது.