கடையம் அருகே கிராம மக்கள் போராட்டம்
By DIN | Published On : 12th March 2021 03:46 AM | Last Updated : 12th March 2021 03:46 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே அணைந்த பெருமாள் நாடானூரில் குடியிருப்பு பகுதியில் உயா் மின்னழுத்த வயா் கொண்டு செல்ல எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடையம் ஒன்றியம் அணைந்தபெருமாள் நாடானூா் கிராமத்தில் குடியிருப்புகள் வழியாக அருகிலுள்ள தனியாா் கல் குவாரிக்கு உயா் மின்னழுத்த வயா் கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அக்
கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோா் திரண்டு மின்வாரிய ஊழியா்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக, பலமுறை எதிா்ப்புத் தெரிவித்தும் தொடா்ந்து அப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், அப்பணியை நிறுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா். தகவலறிந்த ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா்கள் முத்துகிருஷ்ணன், காமராஜ் உள்ளிட்டோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்பணியை நிறுத்துவதாக தெரிவித்து, மின்கம்பிகளை கழட்டி கொண்டு சென்ால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.