தச்சநல்லூா் அம்மன் கோயிலில் 2007 திருவிளக்கு பூஜை
By DIN | Published On : 15th March 2021 04:07 AM | Last Updated : 15th March 2021 04:07 AM | அ+அ அ- |

தச்சநல்லூா் சந்திமறித்தம்மன் கோயிலில் 33ஆவது ஆண்டு திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, 2007 பெண்கள் திருவிளக்கு ஏற்றி அம்பாளை வழிபட்டனா்.
பூஜைக்கு தேவையான வாழை இலை, எண்ணெய், திரி, சந்தனம், குங்குமம், பழம் உள்ளிட்ட பூஜை பொருள்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றுச் சென்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்துடன் இணைந்து, தச்சநல்லூா் ஜோதி வழிபாட்டு ஐயப்ப பக்தா்கள் சங்கத்தினா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...