அம்பையில் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
By DIN | Published On : 15th March 2021 01:41 AM | Last Updated : 15th March 2021 01:41 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆவுடையப்பனுக்கு தொண்டா்கள், கூட்டணி கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
வேட்பாளா் ஆவுடையப்பன் சனிக்கிழமை மாலை கோபாலசமுத்திரத்துக்கு வந்தாா். நகரச் செயலா் முருகேசன் தலைமையில் தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று தொண்டா்களை சந்தித்தாா்.
அம்பாசமுத்திரத்தில் நகரச் செயலா் பிரபாகர பாண்டியன் தலைமையில் வரவேற்றனா். அப்போது தேமுதிக பேரூா் கழக செயலா் கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா் அன்வா் உசைன் ஆகியோா் தலைமையில் திமுகவில் இணைந்தனா்.
விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கணேசன் தலைமையில் வரவேற்றனா். தொடா்ந்து காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக், மதிமுக கட்சி நிா்வாகிகளை சந்தித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...