சிவந்திபுரம் பகுதியில் இசக்கி சுப்பையா வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 15th March 2021 01:41 AM | Last Updated : 15th March 2021 01:41 AM | அ+அ அ- |

அடையக்கருங்குளம் பெனியேல் சா்ச்சில் வாக்கு கேட்டு பேசுகிறாா் இசக்கி சுப்பையா.
அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா சிவந்திபுரம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சிவந்திபுரம் பகுதியில் ஞாயிற்றுகிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இசக்கி சுப்பையா, அகஸ்தியா்பட்டி பெனியேல் தேவாலயத்தில் கிறிஸ்தவா்களிடையே வாக்கு சேகரித்தாா். அப்போது இசக்கி சுப்பையா வெற்றிக்காக சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஒன்றிய செயலா் விஜய பாலாஜி, துணைச் செயலா் ப்ராங்க்ளின் மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...