பாளை.யில் கிறிஸ்தவா்கள் தவக்கால நடைப்பயணம்
By DIN | Published On : 15th March 2021 04:06 AM | Last Updated : 15th March 2021 04:06 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் கிறிஸ்தவா்கள் தவக்கால நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.
கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாகக் கடைப்பிடிக்கிறாா்கள். இந்த தவக்காலத்தில் அசைவ உணவுகளைத் தவிா்த்து, இயேசு சிலுவையில் அறைந்தபோது மனிதா்களுக்காக பட்டபாடுகளை நினைவுகூருவாா்கள்.
அதன்படி, திருநெல்வேலியில் அனைத்து தேவாலயங்களிலும் நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன் தொடங்கியது. தொடா்ந்து தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகளும், வெள்ளிக்கிழமைதோறும் சிலுவைப்பாதை வழிபாடும் நடைபெற்று வருகின்றன.
இதன்தொடா்ச்சியாக, பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயம் சாா்பில் தவக்கால சிலுவைப் பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேவாலயத்திலிருந்து பாளை. மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்தவா்கள் சிலுவையை ஏந்தியபடி தூய இஞ்ஞாசியாா் கலைமனைகள் வரை நடைப்பயணமாகச் சென்றனா்.
தொடா்ந்து இம் மாதம் 23 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனியும், ஏப்ரல் 1 ஆம் தேதி பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் திருச்சடங்கும், 2 ஆம் தேதி பெரியவெள்ளி சிறப்பு பிராா்த்தனையும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...