மூலைக்கரைப்பட்டி அருகே பேருந்து கவிழ்ந்து 50 போ் காயம்
By DIN | Published On : 15th March 2021 01:34 AM | Last Updated : 15th March 2021 01:34 AM | அ+அ அ- |

நான்குனேரி அருகேயுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் தனியாா் பேருந்து ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்ததில் 50 பயணிகள் லேசான காயங்களுடன் தப்பினா்.
திசையன்விளையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த அந்தப் பேருந்து, மூலக்கரைப்பட்டி பகுதியை நெருங்கியபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், பேருந்தில் பயணம் செய்த திசையன்விளை, மூலக்கரைப்பட்டி, திருநெல்வேலி பகுதிகளைச் சோ்ந்த 50 போ் லேசான காயமடைந்தனா். அவா்களுக்கு மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் முதலுதவி அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக மூலக்கரைப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...