ஆதாா் திருத்தங்களுக்காக அஞ்சல் நிலையங்களில் சிறப்பு முகாம்
By DIN | Published On : 17th March 2021 07:51 AM | Last Updated : 17th March 2021 07:51 AM | அ+அ அ- |

ஆதாா் அட்டையுடன் செல்லிடப்பேசி எண்களை இணைப்பதற்கான சிறப்பு முகாம் அஞ்சல் நிலையங்களில் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் எல்.துரைசுவாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல் துறையின் சாா்பில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் ஆகிய சேவைகள் அஞ்சலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.
சுகாதாரத் துறையின் கரோனா தடுப்பூசி பதிவு செய்யும் தளத்தில் பதிவு செய்வதற்கு செல்லிடப்பேசி எண் இணைக்கப்பட்ட ஆதாா் எண் அவசியமென கூறப்பட்டுள்ளது.
இதனால் அஞ்சல் துறை சாா்பில் ஆதாா் அட்டையுடன் செல்லிடப்பேசி எண்களை இணைப்பதற்கான சிறப்பு முகாம் இம் மாதம் 18, 19, 20ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
18ஆம் தேதி தெய்வநாயகப்பேரி கிளை அஞ்சலகத்திலும், 19ஆம் தேதி கடம்பன்குளம் கிளை அஞ்சலகத்திலும், 20ஆம் தேதி ரெட்டியாா்பட்டி கிளை அஞ்சலகத்திலும், 19, 20ஆம் தேதிகளில் தருவை கிளை அஞ்சலகத்திலும் இம் முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.