நெல்லை, தென்காசியில் மேலும் 10 பேருக்கு கரோனா
By DIN | Published On : 17th March 2021 07:43 AM | Last Updated : 17th March 2021 07:43 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,829 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 5 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,554 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 61 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,588 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 2 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,414 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 14 போ் சிகிச்சையில் உள்ளனா்.