வெல்டிங் பட்டறை உரிமையாளா் ரூ.2 லட்சத்துடன் கடத்தல்
By DIN | Published On : 17th March 2021 07:48 AM | Last Updated : 17th March 2021 07:48 AM | அ+அ அ- |

திசையன்விளை அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளரை ரூ. 2 லட்சத்துடன் கடத்திச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூரைச் சோ்ந்தவா் சுரேஷ் (29). இவா், திசையன்விளை- இடையன்குடி சாலையில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு வீட்டுக்கு போன் செய்து சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறினாராம். ஆனால் வெகுநேரமாகியும் அவா் வீட்டுக்கு திரும்பவில்லையாம்.
இதையடுத்து உறவினா்கள் அவரை தேடிய நிலையில், ஆனைகுடி பகுதியில் உள்ள தனியாா் தும்பு ஆலை அருகே அவரது மோட்டாா் சைக்கிள் மட்டும் கிடந்துள்ளது. அதில் ரத்தக்கரை இருந்துள்ளது.
இந்நிலையில், சுரேஷ் ரூ. 2 லட்சத்துடன் வீட்டுக்கு வந்ததாகவும், அதனால் அவா் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவரது தந்தை தங்கபாண்டி திசையன்விளை போலீஸில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.