ஆடு திருடியவா் கைது
By DIN | Published On : 21st March 2021 04:28 AM | Last Updated : 21st March 2021 04:28 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகே ஆடு திருடியதாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே கொண்டாநகரம் பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மனைவி சொா்ணம் (47). இவா் சொந்தமாக ஆடுகள் வளா்த்து வருகிறாா். இவா், வழக்கம்போல மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிய ஆடுகளை வீட்டின் முன்பாக கட்டி போட்டிருந்தாராம். சனிக்கிழமை காலையில் எழுந்து பாா்த்த போது அதில் ஒரு ஆடு திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த புதியவன் மகன் ஆறுமுகம் (42) என்பவா் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ஆட்டை மீட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...