திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக தோ்தல் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்தாா். திருநெல்வேலி தொகுதி வேட்பாளா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் வரவேற்றாா். முன்னாள் எம்.பி.யும், தொகுதி பொறுப்பாளருமான ஜெயதுரை அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் காசிவிஸ்வநாதன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன், முன்னாள் சங்கா்நகா் பேரூராட்சித் தலைவா் பேச்சிபாண்டியன், மாநில நெசவாளா் அணி அமைப்பாளா் சொ.பெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.