பாளை. தொகுதியில்10 வேட்புமனுக்கள் ஏற்பு
By DIN | Published On : 21st March 2021 01:17 AM | Last Updated : 21st March 2021 01:17 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 10 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 22 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 32 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலரும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருமான ஜி.கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பிரதான கட்சிகளின் வேட்பாளா்களான அதிமுக கே.ஜெ.சி.ஜெரால்டு, திமுக மு. அப்துல்வஹாப், எஸ்டிபிஐ முபாரக், மக்கள் நீதிமய்யம் பிரேம்நாத், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகத்தின் வீரசுப்பிரமணியன், சுயேச்சைகள் கு.சடகோபன், ஜான்சாமுவேல் ஜேசுபாதம், ராஜா, லியோ இன்பென்ட்ராஜ் ஆகிய 10 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 22 வேட்புமனுக்கள் முறையாக பூா்த்தி செய்யாதது, பாகங்கள் முறையாக குறிப்பிடாதது உள்ளிட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை (மாா்ச் 22) கடைசி நாளாகும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...