ஆழ்வாா்குறிச்சி அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க மக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 21st March 2021 01:20 AM | Last Updated : 21st March 2021 01:20 AM | அ+அ அ- |

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து திரண்ட செட்டிகுளம் கிராம மக்கள்.
ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் செல்லிடப் பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து அப்பணி நிறுத்தப்பட்டது.
ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளம் கிராமத்தில் சுமாா் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள பிள்ளையாா் கோயில் அருகில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க தனியாா் நிறுவனத்தினா் பணிகளை தொடங்கினா்.
செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் இடத்தின் அருகில் கோயில்கள், பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால் கதிா்வீச்சு அபாயம் இருக்கும் எனக் கூறி அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனா்.
தகவலறிந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சு நடத்தினா். இதில் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனா். தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...