நெல்லையில் பாஜக வாக்குசேகரிப்பு
By DIN | Published On : 25th March 2021 02:46 AM | Last Updated : 25th March 2021 07:12 AM | அ+அ அ- |

திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
அவா், மணிமூா்த்தீஸ்வரம், மேகலிங்கபுரம், பேட்டை, உருடையாா்குடியிருப்பு, தேனீா்குளம், செல்வவிக்னேஷ்நகா், பால்கட்டளை, கணபதிமில் காலனி, இந்திராநகா், சிதம்பரநகா், தாராபுரம், கரையிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் வாக்குசேகரித்தாா். அப்போது அவா் பேசும்போது, பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. பொலிவுறு நகரம் திட்டத்தில் திருநெல்வேலி மாநகரப் பகுதிக்கு பலகோடி மதிப்பிலான பயன்கள் கிடைத்துள்ளது. மத்திய-மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா்.