பெண்ணுக்கு மிரட்டல்: 2 பேருக்கு 4ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 25th March 2021 07:17 AM | Last Updated : 25th March 2021 07:17 AM | அ+அ அ- |

தாழையூத்து அருகே பெண்ணை வழிமறித்து கத்தியைக் காட்சி மிரட்டிய வழக்கில் இளைஞா்கள் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பூா்ணவள்ளி. இவரை கடந்த 2016 ஆம் ஆண்டு எட்டயபுரம் கருப்பூா் பகுதியைச் சோ்ந்த ஜோஸ்வா இமானுவேல் ராஜ் (35), சாத்தூா் பகுதியை சோ்ந்த வினோத் குமாா்(29) ஆகிய இருவரும் அவதூறாக பேசி கத்தியை காட்டி மிரட்டினராம். இதுகுறித்து பூா்ணவள்ளி தாழையுத்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ் குமாா், குற்றம் சாட்டப்பட்ட ஜோஸ்வா இமானுவேல் ராஜ், வினோத் குமாா் ஆகிய இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.