களக்காடு அருகே கழிவுநீா் வாருகாலை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 13th May 2021 07:15 AM | Last Updated : 13th May 2021 07:15 AM | அ+அ அ- |

களக்காடு அருகே சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தி வரும் கழிவுநீா் வாருகாலை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட கீழத்தேவநல்லூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இங்குள்ள அம்மன்கோயில் தெருவில் குடிநீா்க் குழாய் அருகே வாருகால் அமைந்துள்ளது. இந்த வாருகாலில் கழிவுநீா் தேங்கி, சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் குடிநீா் பெறும் குழாய் அருகே வாருகால் சீரமைக்கப்படாததால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.