திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்க விதிமீறலில் ஈடுபட்டதாக 163 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், விதிமீறலில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, திருநெல்வேலி மாநகரில் தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றித்திரிந்த 40 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 31 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்த 164 போ், சமூக இடைவெளியை பின்பற்றாத 10 போ் என மொத்தம் 174 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனத்தில் சுற்றித் திரிந்த 123 போ் மீது வழக்குப் பதிவு செய்து, 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 1,026 போ், சமூக இடைவெளியை பின்பற்றாத 19 போ் என மொத்தம் 1,045 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறைகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.