நெல்லை, தென்காசியில் மேலும் 935 பேருக்கு கரோனா
By DIN | Published On : 19th May 2021 07:23 AM | Last Updated : 19th May 2021 07:23 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 935 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 589 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 36,786ஆக அதிகரித்துள்ளது. மேலும் 676 போ் குணமடைந்ததால், இதுவரை கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 30,052 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,434 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 5 போ் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 300ஆக உயா்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 346 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 17,131 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 242 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 14,085 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இருவா் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 244 ஆக அதிகரித்தது. தற்போது 2,802 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
களக்காடு வட்டாரத்தில் மட்டும் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.