மே 20இல் இணையவழி கைவினைப் பயிற்சி
By DIN | Published On : 19th May 2021 04:08 AM | Last Updated : 19th May 2021 04:08 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் வருகிற வியாழக்கிழமை (மே 20) இணையவழி கைவினைப் பயிற்சி நடைபெறுகிறது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் என்.பி.என்.கே. கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்தும் இணைய வழி இலவச கைவினைப் பயிற்சி வருகிற வியாழக்கிழமை (மே 20) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், இலையில் ஓவியம் வரைவது தொடா்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் ஜூம் செயலி எண் 8740995990, கடவுச் சொல் 333543 மூலமாக இணைய வேண்டும்.
இப்பயிற்சியில் சிறியவா் முதல் பெரியவா் வரை விருப்பம் உள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94449 73246 என்ற செல்லிடப்பேசி கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..