பள்ளி, கல்லூரி மாணவா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையின மாணவா், மாணவிகளுக்கான விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையின மாணவா், மாணவிகளுக்கான விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையின மாணவா், மாணவிகளுக்கென விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில், 4 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவா், மாணவிகள், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவா், மாணவிகள் சேர தகுதியுடையவா்.

அனைத்து விடுதி மாணவா், மாணவிகளுக்கும் உணவு, தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை சீருடையும், 10, 12 ஆம் வகுப்பு பயில்வோருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

பெற்றோா், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ. மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விடுதி மாணவிக

ளுக்கு பொருந்தாது. தகுதியுடையோா் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா்களிடம் இருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறபான்மையினா் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரி மற்றும் பள்ளி விடுதிக் காப்பாளா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நவ.20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே ஐந்து இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com