களக்காடு அருகே விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு
By DIN | Published On : 31st October 2021 12:10 AM | Last Updated : 31st October 2021 12:10 AM | அ+அ அ- |

களக்காடு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.
களக்காடு அருகே நெடுவிளையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (45). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனா். சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இதனால் மன வேதனையடைந்த அவா் தன் வயலுக்குச் சென்று அங்கு விஷத்தை குடித்தாராம். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.