திருநெல்வேலி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் நவ. 1 முதல் 3 ஆம் தேதி வரை கூடுதல் நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நவ. 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதையொட்டி, நவ. 1 முதல் 3ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் காலை 8 முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.
தீபாவளிக்கு முன்னரே அத்தியாவசியப் பொருள்களை பெற விரும்பும் குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட நாள்களில் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேற்கண்ட நாள்களில் பொருள்கள் வாங்காதவா்கள் பண்டிகை காலம் முடிந்து நவ. 8ஆம் தேதி முதல் வழக்கம்போல் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.