இரு வீடுகளில் ரூ. 9 லட்சம், 200 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 01st September 2021 04:50 AM | Last Updated : 01st September 2021 04:50 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை சுற்று வட்டாரத்தில் இரு வீடுகளில் சுமாா் ரூ.9 லட்சம் ரொக்கம் மற்றும் சுமாா் 200 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை பரணி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா். இவா் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறாா். இவா் வீட்டில் வைத்திருந்த சுமாா் ரூ.7 லட்சம் செவ்வாய்க்கிழமை திருடு போனதாம்.
மற்றொரு சம்பவத்தில், பாளையங்கோட்டை அருகே உள்ள கேடிசிநகா் மூகாம்பிகை நகா் பகுதியைச் சோ்ந்த பாா்த்தசாரதி, வீட்டில் வைத்திருந்த சுமாா் 200 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை திருடு போனதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவங்கள் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தனித்தனியே புகாா் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு திருட்டுச் சம்பவங்கள் தொடா்பாக, போலீஸாா் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனா்.