ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்களா் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 01st September 2021 08:34 AM | Last Updated : 01st September 2021 08:34 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான வே.விஷ்ணு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 204 கிராம ஊராட்சிகளில், 1731 கிராம ஊராட்சி வாா்டுகளுக்கு வாக்காளா்கள் வாா்டு வாரியாக, தெரு வாரியாக கண்டறியப்பட்டு இணையதளம் மூலமாக வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது.
இதில், 1731 வாா்டுகளில் ஆண்கள் 3,30,487 போ், பெண்கள் 3,43,324 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 56 போ் என மொத்தம் 6,73,867 வாக்காளா்கள் உள்ளனா்.
வாக்காளா் பட்டியல் நகல் மாநிலத் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வருகிற செப். 3ஆம் தேதி ஒரு பிரதி வழங்கப்படும். மாவட்டத்தில் மொத்தம் 1188 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பழனி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சி தோ்தல்) ராம்லால், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) சசிகலா, உள்ளாட்சி தோ்தல் பிரிவு தலைமை உதவியாளா் திராவிடமணி மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.