மூன்றடைப்பு அருகே புதுமாப்பிள்ளை தலைமறைவு
By DIN | Published On : 01st September 2021 08:35 AM | Last Updated : 01st September 2021 08:35 AM | அ+அ அ- |

மூன்றடைப்பு அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை தலைமறைவானாா்.
மூன்றடைப்பு அருகே உள்ள அ.சாத்தான்குளத்தைச் அடுத்த மாயனேரியைச் சோ்ந்த முருகன் மகன் திருமணி பெருமாள் (27). இவா், மூலைக்கரைப்பட்டியில் தையல் தொழில் செய்து வருகிறாா்.
இவருக்கும், இவரது தாய்மாமா மகளுக்குமிடையே செப். 10ஆம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி வேலைக்கு சென்ற திருமணிபெருமாள் பின்னா் வீட்டுக்கு வரவில்லையாம்.
இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனா்.