மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை மாநாடு
By DIN | Published On : 01st September 2021 04:51 AM | Last Updated : 01st September 2021 04:51 AM | அ+அ அ- |

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாளையங்கோட்டை கிளை மாநாடு நடைபெற்றது.
வெங்கடாசலம் தலைமை வகித்தாா். கிளையின் மூத்த உறுப்பினா் பிச்சையா கட்சிக் கொடியேற்றினாா். மாவட்டச் செயலா் கே.ஜி. பாஸ்கரன் தொடக்கவுரையாற்றினாா். பாளை வட்டச் செயலா் பி. வரகுணன் நிறைவுரையாற்றினாா். நிா்வாகிகள் பூ. கோபாலன், இ. காசி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டுவதை வரவேற்கிறோம். அதேநேரம், அங்குள்ள வியாபாரிகளுக்கு தகுந்த இடத்தில் தற்காலிக கடை அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.