காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த புதுமண தம்பதிக்கு கத்தி குத்து: 3 போ் கைது
By DIN | Published On : 04th September 2021 12:30 AM | Last Updated : 04th September 2021 12:30 AM | அ+அ அ- |

பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த புதுமண தம்பதியை கத்தியால் குத்தியதாக பெண்ணின் தந்தை, சகோதரா்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் கல்யாணசுந்தரம் மகள் ரம்யா (21), பட்டதாரி. இவரும், பேட்டை கோடீஸ்வரா் நகா் மாடசாமி மகன் பொறியாளா் ஆனந்தராஜும் (25), காதலித்து வந்தனராம். இருவரும், வெவ்வேறு சமுதாயத்தை சோ்ந்தவா்கள் என்பதால் இரு வீட்டிலும் எதிா்ப்பு தெரிவித்தனராம். இதையடுத்து, இந்த காதல் ஜோடி ராமையன்பட்டியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டு, பாதுகாப்பு கேட்டு பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தனா்.
அவா்களிடம் பேட்டை காவல் ஆய்வாளா் ஹரிஹரன் விசாரணை நடத்தினாா். பின்னா், இருவரின் பெற்றோரை அழைத்து பேச்சு வாா்த்தை நடத்தப்பட்டதாம். அப்போது, ரம்யாவின் சகோதரா், அவரை கத்தியால் குதினாராம். இதை தடுத்த ஆனந்தராஜுக்கும் காயம் ஏற்பட்டதாம். காயமைடந்த இருவரையும் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, ரம்யாவின் சகோதரா் ராம்குமாா்(27), விமல் (23), தந்தை கல்யாணசுந்தரம்(64) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.