மனிதநேய மக்கள் கட்சியினா் மனு
By DIN | Published On : 04th September 2021 12:12 AM | Last Updated : 04th September 2021 12:12 AM | அ+அ அ- |

மேலப்பாளையத்தில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தக் கோரி மனிதநேய மக்கள் கட்சியினா் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
மனிதநேய மக்கள் கட்சியினா் மேலப்பாளையம் உதவி ஆணையா் சுகிபிரேமலாவிடம் அளித்த மனு: மேலப்பாளையம் பகுதி 29 ஆவது வாா்டுக்கு உள்பட்ட அமிா்தா நகா், அமுதா பிட் நகா், டீச்சா் காலனி ஆகிய விரிவாக்க பகுதிகளில் 300-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறாா்கள்.
மாநகராட்சிக்கு சொத்துவரியை முறையாக செலுத்தி வருகிறாா்கள். இப்பகுதியில் மொத்தம் 23 மின்கம்பங்கள் உள்ளன. ஆனால், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், முதியவா்கள், குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகிறாா்கள். ஆகவே, அப் பகுதிகளில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.