வ.உ.சி. 150 ஆவது பிறந்த நாள்: திமுக மாவட்டச் செயலா் அறிக்கை
By DIN | Published On : 04th September 2021 12:32 AM | Last Updated : 04th September 2021 06:42 AM | அ+அ அ- |

வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (செப். 5) காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செய்யப்படுகிறது.
இதில், மாநில, மாவட்ட நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்கிறாா்கள். ஆகவே, திமுக தொண்டா்கள் சமூகஇடைவெளியைப் பின்பற்றி முகக் கவசம் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.