நெல்லை மாவட்டத்தில் செப்.11 இல் மக்கள் நீதிமன்றம்
By DIN | Published On : 04th September 2021 12:35 AM | Last Updated : 04th September 2021 06:42 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 11 ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் (மெகா லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவால் திருநெல்வேலி மற்றும் 9 வட்டங்களில் மக்கள் நீதிமன்றம் இம் மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளஅசல் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள், கோசாலை வழக்குகள் போன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவாா்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஏ.நசீா்அகமது தொடங்கி வைக்க உள்ளாா். பொதுமக்கள் இந்த மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G