மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சுதந்திர தின விழா: ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர சோதனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:38 am

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய வளாகம் முழுவதும் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனா். தண்டவாளங்கள், நடைமேடைகள், பாா்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை ஆகியவற்றில் வெடிகுண்டு கண்டறியும் நவீன இயந்திரங்களைக் கொண்டு சோதனை செய்தனா். ரயில் நிலையத்திற்குள் வந்த பயணிகளின் உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டா் கொண்டு சோதனை செய்யப்பட்டது. இம் மாதம் 15 ஆம் தேதி வரை கண்காணிப்பில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை காலை வந்த அந்தியோதயா ரயிலிலும் போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதேபோல திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சந்திப்பு, தற்காலிக பேருந்து நிலையம், அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில், குறுக்குத்துறை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.