தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து 3 லட்சம் நெல் மூட்டைகள் வீணாகியுள்ளன. இந்த விவகாரத்தில் எந்த விவசாயிகள் சங்கமும் குரல் கொடுக்கவில்லை. விவசாயிகளுக்காக அதிமுக மட்டுமே குரல் கொடுத்து வருகிறது. நாங்கள் பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுத்தபோது, ரூ.5,000 கொடுக்க வேண்டியதுதானே எனஅப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். ஆனால், இப்போது அவர் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கிறபோது ஒரு பேச்சு பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்.