தமமுக சாா்பில் தேவநேயப்பாவாணா் பிறந்த நாள் விழா
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் தேவநேயப்பாவாணரின் 120 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மகாராஜா நகா் தொடா்வண்டி சாலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட தேவநேயப்பாவாணரின் படத்திற்கு மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சாா்பில் திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே தேவநேயப்பாவாணா், திருவள்ளுவா் ஆகியோருக்கு சிலை அமைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் வே.முருகன், மாவட்ட மகளிரணி தலைவா் பாலம்மாள், செயலா் வசந்தி, இணைச் செயலா் சா்மிளா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
படவரி: பயக07பஙஙஓ
தேவநேயப்பாவாணரின் பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
