2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது
திருநெல்வேலி அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருநெல்வேலி அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கோட்டைசாமி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு திருநெல்வேலி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது சிங்கிகுளம் அருகே வந்த சிறிய ரக சரக்குவாகனத்தை மடக்கி சோதனை செய்தனா். அப்போது அதில் அனுமதியின்றி ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த களக்காடு அருகே உள்ள மஞ்சங்குளம் ஆறுமுகம்(37), அப்பா்குளம் மாரியப்பன்(37) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்ததில், அவா்கள் களக்காட்டில் இருந்து நாகா்கோவிலுக்கு ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களது வாகனம், அதிலிருந்த 2 டன் ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...