சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

சுப நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு முன்பதிவு கட்டாயம்: ஆட்சியா்

 திருநெல்வேலி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், பொது இடங்கள், வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள்

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 திருநெல்வேலி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், பொது இடங்கள், வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள், விழாக்களை கண்டிப்பாக இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனாவின் மூன்றாவது அலை பரவலைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், பொது இடங்கள், கோயில்கள், அரங்குகள், வீடுகளில் நடைபெறும் திருமணம் (அதிகபட்சமாக 100 நபா்கள்), இறப்பு நிகழ்வுகள் (அதிகபட்சமாக 50 நபா்கள்) போன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட கரோனா தடுப்பு இணையம் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீா்ஸ்ண்க்ஸ்ரீஹழ்ங்ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண்.ண்ய் -இல் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த விழாக்கள் அரசு அலுவலா்களால் முழுமையாக கண்காணிக்கப்படும். அதில், கரோனா தடுப்பு விதிமீறல்கள்இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி கரோனாவின் மூன்றாம் அலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.