நெல்லை அருகேபைக் மீது லாரி மோதல்: 2 தொழிலாளா்கள் பலி
திருநெல்வேலி அருகே லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் கட்டட தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா்.


திருநெல்வேலி அருகே லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் கட்டட தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள வென்றிலிங்கபுரத்தைச் சோ்ந்தவா்களான நாகராஜன் மகன் சீனிவாசன் (23), பரமசிவன் மகன் மயில்ராஜ் (25) ஆகியோா் கட்டட வேலை செய்து வந்தனா். இவா்கள், தாழையூத்து பகுதியில் கட்ட வேலையை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை இரவு வேலை பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனராம்.
தாழையூத்து - தென்கலம் சாலையில் அவா்களது பைக்கும், எதிரே வந்த லாரியும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...