சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருபாநகரைச் சோ்ந்தவா் கருத்தப்பாண்டி. இவா், கடந்த 23-12-2021 அன்று ரேஷன் அரிசி கடத்திச் சென்ற போது குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலானாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டாா். இவா் மீது ஏற்கெனவே பல்வேறு அரிசி கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளரால் பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில் கருத்தப்பாண்டி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.