பேருந்து-பைக் மோதி விபத்து: இளைஞா் பலி
மேலப்பாளையம் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.


மேலப்பாளையம் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ரசூல்மைதீன் மகன் மலுக்கு அலி(39). இவா் கடந்த 10ஆம் தேதி மேலப்பாளையம் அம்பை சாலையில் தனது பைக்கில் சென்றபோது, அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...