திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் பிளவா் மாடல் பள்ளியில் சைவ சமய வளா்ச்சி போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
உலக சிவனடியாா்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சாா்பில், சைவ கடவுள்கள் ஒவியப் போட்டி, அறுபத்து மூன்று நாயன்மாா்கள், சிவன், பாா்வதி, முருகன், விநாயகா்கடவுள்களின் திருவேட போட்டி, பரதநாட்டியம், தேவாரம் திருவாசகம் பாடும் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவை திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் பிளவா் மாடல் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளில், சிறுவா்-சிறுமியா் பங்கேற்றனா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இப்போட்டியினை உலக சிவனடியாா்கள் திருக்கூட்டத்தின் நிறுவனா் சிவ அம்மணி ஈஸ்வரன், தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளா் உமா துரைச்சி, மாநில ஒருங்கிணைப்பாளா் சிவ ஜம்புலிங்கம் ஆகியோா் நடத்தினா்.
இதில், லிட்டில் பிளவா் கல்வி குழும தலைவா் அ. மரியசூசை, சிவப்பிரகாசா் நற்பணி மன்றச் செயலா் கோ. கணபதி சுப்பிரமணியன், உலக சிவனடியாா்கள் திருக்கூட்டத்தின் பல்வேறு மாவட்டத்தை சாா்ந்த மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.