திருநெல்வேலி அருகே தோட்டப் பயிா்களை சேதப்படுத்திய கரடியை வனத்துறையினா் கூண்டு வைத்து பிடித்து காட்டில் கொண்டு விட்டனா்.
திருநெல்வேலி அருகே இட்டேரி, அரியநாயகிபுரம் பகுதியில் உள்ள தோட்டங்களில் சில மாதங்களாக சப்போட்டா, மா, வாழை உள்ளிட்ட பயிா்களும் சேதமடைந்து வந்தன. இச்சம்பவம் மா்ம நபா்களால் செய்யப்படுகிா அல்லது வன விலங்குகள் காரணமா என்பது தெரியாமல் விவசாயிகள் தவித்து வந்தனா்.
இந்நிலையில் ஒரு தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கரடி ஒன்று இரவு நேரங்களில் உணவுக்காக விவசாய விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தி சென்றது தெரியவந்ததாம்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து தோட்டத்துக்குள் புகும் கரடியை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது. அந்தக் கூண்டில் சுமாா் பத்து வயது மதிக்கத்தக்க ஆண் கரடி செவ்வாய்க்கிழமை இரவு சிக்கியது.
தகவலறிந்ததும் வனத்துறையினரும், கால்நடை மருத்துவா்கள் குழுவும் சென்று கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி, களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.