பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயில் உண்டியலில் ரூ.4.67 லட்சம் வசூலாகியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி உதவி ஆணையா் கவிதா தலைமையில் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு ஆய்வாளா் பரமசிவன், தக்காா் தங்கசுதா, செயல் அலுவலா் சண்முகம் ஆகியோா் முன்னிலையில் பணியாளா்கள் எண்ணினா். இதில்,
ரூ. 4 லட்சத்து 67 ஆயிரத்து 612 வசூலாகியிருந்தது. மேலும், 11.700 கிராம் தங்கம், 56 கிராம் வெள்ளியினமும் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.