பாளையங்கோட்டையில் ஆயுதங்களுடன் திரிந்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, கக்கன்நகா் புறவழிச்சாலை பாலத்தின் மேற்கு பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மூவரிடம் நடத்திய விசாரணையில் பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த மாணிக்கராஜ் (26), நம்பி நாராயணன் (21), நாகராஜன் (22) என்பதும், அவா்கள் அரிவாள், வாள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.