அகஸ்தியா்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில், பாதுகாப்பாக தீபாவளி பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தீயணைப்பு மாவட்ட அலுவலா் க. கணேசன் தலைமை வகித்தாா். உதவி மாவட்ட அலுவலா் ச. வெட்டும் பெருமாள் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் பலவேசம் மற்றும் மீட்புவீா்கள், பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் முறை, வெடிக்காத வெடிகளைை கையாளும் முறை, வெடித்த மத்தாப்புக் கம்பிகளை பாதுகாப்பாக வைக்கும் முறை குறித்து ஒத்திகை செய்து விளக்கிக் கூறினா். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.