கடையம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி இசக்கிமுத்து மகள் இசக்கிலெட்சுமி (23). இவா் செவ்வாய்க்கிழமை மாலை கடையம் அருகே துப்பாக்குடி பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த காளிமுத்து மகன் ஆனந்த் (22) , அவரது உறவினா் சிவா (19) ஆகிய இருவரையும் கைது செய்தனா். போலீஸாா் விசாரணையில் ஆனந்த்தின் அண்ணன் வெங்கடேஷுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு முதல்நாள் இசக்கி லெட்சுமி வேறு இளைஞருடன் சென்று விட்டதால், அவரை கொலை செய்ததாக ஆனந்த் கூறியுள்ளாா்.