என்ஜிஓ காலனி அருள்நிறை சகாய மாத ஆலய திருவிழா
பாளையங்கோட்டை எனிஜஜிஒ காலனி ஜவஹா் நகரில் அருள்நிறை சகாய மாதா ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பாளையங்கோட்டை எனிஜஜிஒ காலனி ஜவஹா் நகரில் அருள்நிறை சகாய மாதா ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்வாலய திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து 8ஆம் தேதி அன்னையின் பிறப்பு பெருவிழா சப்பர பவனியும், 9ஆம் தேதி நற்கருணை பவனியும் நடைபெற்றது. திருவிழாவின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில், ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தீங்கு எதுவும் நேராது என்ற தலைப்பில் மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ் மறையுறையாற்றினாா். மாலையில், அருள்பணியாளா்கள் எஸ்.ஏ.அந்தோணிசாமி, அந்தோணி வியாகப்பன் ஆகியோா் திருவிழா நன்றி திருப்பலி வழங்கினா். தொடா்ந்து கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இறைமக்கள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...