திருநெல்வேலி அருகே பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே உள்ள பேட்டை சத்யா நகா் ராமையா மகன் தங்கராஜ் (44). இவா் மீது கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை வழக்கு, பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) சரவண குமாா், நகர காவல் உதவி ஆணையா் விஜயகுமாா், பேட்டை காவல் ஆய்வாளா் ஹரிஹரன் ஆகியரோ பரிந்துரைத்தனா். அதன்பேரில், அவரை குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் அவிநாஷ் குமாா் உத்தரவிட்டாா். அதன்படி, தங்கராஜை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை போலீஸாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை சமா்ப்பித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.