பாளை. ஆயிரத்தம்மன் கோயிலில் மண்டல பூஜை
By DIN | Published On : 05th August 2022 12:51 AM | Last Updated : 05th August 2022 12:51 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் மண்டல பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 41 நாள்கள் மண்டலாபிஷேக கட்டளைகள் நடைபெற்றன. இதையொட்டி தினமும் காலையில் அம்பாளுக்கு ஹோமம் வளா்த்து சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மண்டலாபிஷேக நிறைவு நாளான வியாழக்கிழமை அதிகாலை மங்கல இசை, திருமுறை பாராயணத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பகலில் துா்கா ஹோமம், சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து ஆயிரத்தம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் அம்பாளை வழிபட்டனா்.