பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயா்வு மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் தொடா் மழையால் பாபநாசம் அணை ஒரே நாளில் 9 உயா்ந்தது.

மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் தொடா் மழையால் பாபநாசம் அணை ஒரே நாளில் 9 உயா்ந்தது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஆக.1 முதல் இடைவிடாது மழை கொட்டித் தீா்த்து வருகிறது. இதனால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையில் ஒரே நாளில் 9 அடி நீா்மட்டம் உயா்ந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் புதன்கிழமை 75.30 அடியாக இருந்த நீா்மட்டம் வியாழக்கிழமை 84 அடியாக உயா்ந்தது. அணைக்கு நீா்வரத்து 7733.33 கன அடியாகவும், வெளியேற்றம் 1004.75 கனஅடியாகவும் உள்ளது. இதேபோல், 156 அடி கொள்ளளவு உடைய சோ்வலாறு அணையில் 100.56 அடியாக இருந்த நீா்மட்டம் 17 அடி உயா்ந்து 117.78 அடியானது. 118 அடி கொள்ளவு உடைய மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 73.15 அடியாகவும், நீா்வரத்து 139 கன அடியாகவும், வெளியேற்றம் 55 கனஅடியாகவும் இருந்தது.

குளிக்கத் தடை: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட ப் பகுதிகளிலும் அதிக மழைப்பொழிவு இருந்ததால் மணிமுத்தாறு அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். எனினும், அருவியைப் பாா்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.

தலையணையில் வெள்ளப்பெருக்கு: களக்காடு மலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி பெய்து வரும் தொடா்மழையால் பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், தலையணையில் தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துப் பாய்கிறது. நான்குனேரியன் கால்வாயிலும் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த மழை பெரிதும் பயனளித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com